Ramanathapuram FSM Shaping Mall Second year inauguration

ராமநாதபுரம் எப்.எஸ்.எம்.ஷாப்பிங் மால் இரண்டாம் ஆண்டு துவக்கவிழா மற்றும் வாடிக்கையாளர் குடும்ப விழா வெகு விமர்சையாக ஆட்டம்பாட்டம் கொண்டாட்டத்துடன் நடந்தது.

ராமநாதபுரம் குமரய்யா கோயில் அருகே ராமேஸ்வரம் ரோட்டில் எப்.எல்.எம். ஷாப்பிங் மால் கடந்தாண்டு துவங்கப்பட்டது. இந்த ஷாப்பிங் மாலில் டிபார்ட்மென்ட் ஸ்டோர், உள்ளுர் முதல் வெளிநாடு வரையிலான அனைத்து வகையான பொருட்களும் தரமாகவும் குறைந்தவிலையிலும் வி்ற்பனை செய்யப்படுகிறது.

மேலும் அருசுவை உணவகங்கள், குளிர்பான கடைகள், பேக்கரிகள் போன்றவைகளும் இடம்பெற்றுள்ளன. குழந்தைகள் விளையாட நவீன வகையாகன விளையாட்டு தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் டைனோசர், ஸ்பீடு கார் உள்ளிட்ட பலவிதமான பொழுது போக்கு அம்சங்கங்கள் இடம்பெற்றுள்ளன. ஞாயிறுதோறும் குழந்தைகளுக்கான சுப்பர் சிங்கர் பாட்டுபோட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன.

இந்த எப்.எஸ்.எம்.ஷாப்பிங் மாலின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா ஷாப்பிங் மால் மைதானத்தில் நடந்தது.

இரண்டாம் ஆண்டு துவக்கவிழாவில் டாக்டர் டத்தோ இப்ராகிம் வரவேற்று பேசினார். விழாவில் சன் டிவி புகழ் பார்வதி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். சன் மற்றும் விஜய் டிவி புகழ் கலைஞர்களின் ஆடல்பாடல் நிகழ்ச்சிகள் நடந்தது.

விழாவில் சுப்பர்சிங்கர் பாடல் போட்டிகளில் பங்கு பெற்று பரிசு பெற்ற 10க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு எப்.எஸ்.எம். ஷாப்பிங் மால் இயக்குனர் முகம்மது அபுபக்கர் கிப்ட் செலான் வழங்கி கவுரவித்தார்.

விழாவில் எப்.எஸ்.எம்.ஷாப்பிங் மால் வாடிக்கையாளர்களுக்கான பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 6பேருக்கு ஸ்குட்டி வாகனம், 10க்கும் மேற்பட்டவர்களுக்கு வாஷிங் மெஷின், 5க்கும் மேற்பட்டவர்களுக்கு பிரிட்ஜ், 5க்கும் மேற்பட்டவர்களுக்கு எல்இடி டிவி என வாடிக்கையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் அலாவுதீன், ரோட்டரி துணை தலைவர் மற்றும் முத்த வக்கீல் ரவிசந்திரராமவன்னி, வக்கீல் முனியசாமி, வாலியா காஸ் உரிமையாளர் முத்துராமலிங்கம், முன்னாள் கவுன்சிலர் காமராஜர், டாக்டர் இளங்கோவன், வசந்தா கன்ஸ்ட்ரக்சன் இன்ஜினியர் ராஜேஸ்கண்ணா, சாஸ்தா உட்பட பலர் பங்கேற்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!