Ramanathapuram Velu Manikkam Food Park Opening Ceremony: Importance to Marine Foods

ராமநாதபுரம் அரண்மனை தலைமை அஞ்சல்நிலையம் அருகில் வேலுமாணிக்கம் உணவு புங்கா திறப்பு விழா நடந்தது.

வேலுமாணிக்கம் உணவு பூங்காவை முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் திறந்து வைத்தார். கதிர் பேக்கரியை முதுகுளத்துார் எம்எல்ஏ மலேசியா பாண்டியன் திறந்து வைத்தார். சரஸ்வதி பாண்டியன், டாக்டர் ஆருயிர் செல்வன், டாக்டர் பவதாரணி, திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் இன்பா ரகு ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.
ராமநாதபுரம் வர்த்தக சங்க தலைவர் லயன் ஜெகதீசன் எவரெஸ்ட் ஜூவல்லர்ஸ் உரிமையாளர் வாசுதேவன் ஆகியோர் முதல் விற்பனையை தொடங்கி வைத்தனர். முன்னதாக வேலுமாணிக்கம் உணவு புங்கா உரிமையாளர்கள் ஜெகநாதன், முர்த்தி, ஜெயராமன் ஆகியோர் வரவேற்றனர்.

டாக்டர் சஞ்சீவ், டாக்டர் சங்கநிதி, டாக்டர் ராஜூவ், அரசு ஒப்பந்தகாரர் கதிரேசன், விமலசுந்தரி, இன்ஜினியர் பிரதீவ் ஆகியோர் திறப்பு விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
ராமநாதபுரத்தில் முதன்முறையாக உணவு பூங்கா திறக்கப்பட்டுள்ளது. இங்கு கார் பார்க்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது. உணவு வகைகளில் இந்தியன், சைனீஸ், தென்னிந்திய மற்றும் வடஇந்திய என அனைத்துவிதமான உணவு வகைகளும், சைவம் மற்றும் அசைவ உணவுகள் சிறப்பாக தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.

குறிப்பாக கடல் உணவுகளான மீன், இறால், நண்டு போன்றவைகள் சிறந்த முறையியும் ஆரோக்கியமான முறையிலும் தயாரித்து வழங்குவதாகவும், சுற்றுலா பயணிகள் கடல்சார் உணவுகள் சாப்பிட்டு மகிழ உகந்த சிறந்த இடம் என நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி: இ.சிவசங்கரன், ராமநாதபுரம்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!