The Clean of the temple and began to work Ramanathaswami collector at Rameswaram

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவில் வளாகத்தில் இன்று இந்து சமய அறநிலையத் துறையின் சார்பாக, மாவட்ட ஆட்சியர் ச. நடராஜன் ‘தூய்மையே சேவை” இயக்கத்தின் கீழ் தூய்மை பணிகளை மேற்கொண்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மத்திய, மாநில அரசுகளின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் மூலம் 15.09.2017 முதல் 02.10.2017 ‘சுவச்தா ஹே சேவா – தூய்மையே சேவை” இயக்கத்தின் கீழ் மாவட்டம் முழுவதும் சுற்றுப்புற தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டதன் அடிப்படையில், இராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு சுற்றுப்புற தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இன்றைய தினம் இந்து சமய அறநிலையத் துறையின் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் ராமேஸ்வரம் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோவில் வளாகத்தில் ‘தூய்மையே சேவை” இயக்கத்தின் கீழ் தூய்மைப் பணிகளை தொடங்கி வைத்து தூய்மைப் பணிகளில் ஈடுபட்டார்.

அதன்பிறகு மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :

இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள இராமேஸ்வரம் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்த திருத்தலமாக விளங்கி வருகிறது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்து மட்டுமல்லாது, அண்டை மாநிலங்கள், அயல்நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் யாத்ரீகர்கள் வருகை தந்து வழிபட்டு வருகின்றனர்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த திருத்தலத்தினை தூய்மையாக பராமரிப்பது நம் ஒவ்வொருவருடைய கடமையாகும். இராமேஸ்வரம் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோவில் வளாகத்தில் குப்பை மற்றும் கழிவுகளை அகற்றி சுற்றுப்புறத்தினை சுகாதாரமான முறையில் பேணிக்காத்திடும் வகையில் ‘தூய்மையே சேவை” இயக்கத்தின் கீழ் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இராமமேஸ்வரம் கடற்கரையில் செய்யப்படும் சடங்குகளின் போது பக்தா;கள் பழைய ஆடைகளை கடற்கரையில் விட்டுச் செல்லும் பழக்கம் இருந்து வருகின்றது. இதன் காரணமாக சுற்றுப்புறம் மாசுபடும் சூழ்நிலை ஏற்படுகின்றது.

இதனை தவிர்த்திடும் விதமாக பொதுமக்கள் பழைய ஆடைகள், மலர்கள் உள்ளிட்ட பொருட்களை கடற்கரையில் விட்டுச்செல்லாமல் அதற்கென்று அமைக்கப்பட்டுள்ள இடத்தினை பயன்படுத்தி சுகாதாரத்தினை மேம்படுத்திட ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்.

மேலும் பொதுமக்களிடம் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் அதிகளவில் அறிவிப்பு பதாகைகள், மற்றும் ஒலிபெருக்கி அறிவிப்புகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திட அலுவலர்கள் நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள் திருக்கோயில் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினை தவிர்த்திட வேண்டும். மீறுவோர் மீது சட்ட நடவடிக்கைகள் மூலம் அபராதம் வசூலிக்கப்படும் என தெரிவித்தார்.

முன்னதாக, இராமநாதசுவாமி திருக்கோவில் கிழக்கு கோபுர வாசலில் மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் தலைமையில் அரசு அலுவலர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் ‘தூய்மையே சேவை இயக்கம்” விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கோ.செ.மங்கயர்கரசி, உதவி ஆணையர் பாலகிருஷ்ணன், உட்பட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!