ரேசன்: சர்க்கரை விலை உயர்வை கண்டித்து, நவ.22-ல் பெரம்பலூர் நகர திமுக சார்பில் கண்ட ஆர்ப்பாட்டம்

schedule
2017-11-20 | 13:37h
update
2017-11-20 | 13:43h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Ration: Demonstration on behalf of DMK in Perambalur Town , denouncing sugar price hike

பெரம்பலூர் நகர திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சமீபத்தில் அரசு ரேசன் கடைகளில் சர்க்கரை விலையை உயர்த்தியதை கண்டித்து பெரம்பலூர் நகர திமுக சார்பில் நகராட்சியில் உள்ள ரேசன் கடைகள் முன்பாக கண்டன ஆர்பார்ட்டம் நாளை மறுநாள் ( நவ.22). புதன் அன்று நடக்கிறது.

பெரம்பலூரில் நகராட்சி வார்டு எண் 19 மற்றும் 2 வது வார்டுகளில் (தெப்பக்குளம்) மாவட்ட செயலாளர் குன்னம்.சி.ராஜேந்திரன் தலைமை வகிக்கிறார். நகர செயலாளர் ம.பிரபாகரன் முன்னிலை வகிக்கிறார்.

Advertisement

இதே போன்று, 6-வது வார்டில் தலைமைக்கழக உறுகப்பினரும், வழக்கறிஞருமான என்.ராஜேந்திரன் தலைமையிலும், தெற்கு தெரு (வார்டு எண் : 16, 17, 18 ) -ல் மாவட்ட அவைத் தலைவர் அ.நடராஜன் தலைமையிலும், 20 மற்றும் 21 வது வார்டுகளில் (அரணாரை) பொதுக்குழு உறுப்பினர் வி.வெள்ளைச்சாமி தலைமையிலும், 3 மற்றும் 4வது வார்டுகளில் முன்னாள் கவுன்சிலர் அப்துல்பாரூக் தலைமையிலும், 1வது வார்டு (சமத்துவபுரம்) பொதுக்குழு உறுப்பினர் சி.சிவக்குமார் தலைமையிலும், 12 மற்றும் 13 வது வார்டுகளில் வழக்கறிஞர் அணி து.ஹரிபாஸ்கர் தலைமையிலும், 9வது வார்டில் (துறைமங்கலம்) மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தி.இராசா தலைமையிலும், 8வது வார்டில் (துறைமங்கலம்) நகர அவைத் தலைவர் ஜி.துரைராஜ் தலைமையிலும், 10வது வார்டில் (துறைமங்கலம்) மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தங்க. கமல் தலைமையிலும், வார்டு எண் 5 மற்றும் 15 வார்டுகளில் (ராம் தியேட்டர் – அவ்வையார் நகர்) முன்னாள் எம்.எல்.ஏ டாக்டர்.மு. தேவராஜன் தலைமையில் நடக்கிறது என்றும், ஆர்ப்பாட்டத்திற்கு மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், மற்றும் அணி நிர்வாகிகள், தொண்டர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு ஆதரவளித்து போரட்டத்தை வெற்றி அடைய செய்ய வேண்டும் என அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
22.06.2026 - 07:42:29
Privacy-Data & cookie usage: