அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ரியல் எஸ்டேட் ஏஜன்ட் பலி!

schedule
2021-07-19 | 17:55h
update
2021-07-19 | 17:55h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Real estate agent killed in unidentified vehicle collision near in Perambalur.

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ரியல் எஸ்டேட் ஏஜன்ட் பலி!

பெரம்பலூர் அருகே அன்று இரவு 8 மணிக்கு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பைக்கில் சென்ற ரியல் எஸ்டேட் ஏஜன்ட் பலியானார்.

Advertisement

பெரம்பலூர் மாவட்டம், வேப்பநதட்டை அடுத்துள்ள பெரியம்மாபாளையம் – கிழக்கை சேர்ந்தவர் தங்கவேல் மகன் நடராஜ் (வயது 55), ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் இன்று இரவு 8 மணிக்கு பெரம்பலூர் – ஆத்தூர் சாலையில் பைக்கில் பெரியம்மாபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர் வெங்கனூர் ஏரி அருகே சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற அரும்பாவூர் போலீசார், உடலை மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது வழக்குப் பதிவு செய்து, தப்பி ஓடிய அடையளம் தெரியாத வாகனத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 14:45:33
Privacy-Data & cookie usage: