Redressal Meeting for farmers on 30th of Namakkal

நாமக்கல்லில் வரும் 30ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

நாமக்கல் மாவட்ட அக்டோபர் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 30ம் தேதி செவ்வாய் 10.30 மணிக்கு நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை வகிக்கிறார். இக்கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு, விவசாயம் தொடர்பான பல்வேறு தகவல்களைத் தெரிந்து கொள்வதுடன், நிலப்பிரச்சினைகள், பால் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் விவசாயம் தொடர்பான குறைகள் ஏதேனும் இருப்பின் அவற்றைத் தெரிவித்து உரிய நிவாரணம் பெறலாம் என தெரிவித்துள்ளார்.

Tags:

Copyright 2015 - © 2022 — Kaalaimalar | காலைமலர் | Tamil Daily News | தமிழ் நாளிதழ் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!