Redressal meeting for Perambalur District Farmers Announced by collectorபெரம்பலூர் கலெக்டர் வே.சாந்தா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் செப். 26 அன்று காலை 10.00 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக கூட்ட மன்றத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேளாண்மை சம்பந்தமான நீர்ப்பாசனம், வேளாண்மை கடன் உதவிகள், வேளாண்மை இடுபொருட்கள், வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் பற்றிய முறையீடுகள் பற்றி விவாதிக்கப்படும். எனவே விவசாயிகள் அன்றைய தினம் தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம், என தெரிவித்துள்ளார்.