ரிலையன்ஸ்

ஜியோவிற்கு சொந்தமான நிறுவனத்தில் ரூ. 18 லட்சம் ரொக்கம், 1 லட்சம் மதிப்பு லேப்டாப்புகள் துணிகர கொள்ளை: பெரம்பலூர் அருகே சம்பவம்!

schedule
2022-03-28 | 16:57h
update
2022-03-28 | 16:58h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Reliance – Jio-owned company for Rs. 18 lakh cash, 1 lakh worth laptops venture robbery: Incident near Perambalur!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ரிலையன்ஸ் – ஜியோ கம்பனியின் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தில் 17 லட்சம் பணம் மற்றும் 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் விசாரணை

Advertisement

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் இரூரில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அமைந்துள்ளது ஜியோமார்ட் கிராப் ஏ கிராப் பிரைவேட் லிட். பெயிரில் நிறுவனம் 6 மாதங்களாக இயங்கி வருகிறது. இதில் 25 பேர் வேலை செய்கின்றனர். 11 வண்டிகள் உள்ளது.

நேற்று இரவு 9 மணி அளவில் அலுவலகத்தை பூட்டி விட்டு, இன்று காலை 6:30 மணி அளவில் அதில் பணிபுரியும் லோடுமேன்களான முருகேசன், விஜய், பிரசாந்த் ஆகியோர் அலுவலகத்தை வந்து பார்த்து போது பூட்டை உடைத்து, பணம் வைக்கப்பட்டிருந்த அறையும் திறந்து கிடந்ததை பார்த்து உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் இருந்த ரூ.17, 75,164 ரொக்கப் பணமும், ஒரு லட்சம் மதிப்பிலான 2 லேப்டாப்கள் காணாமல் போயிருந்தது.

கொள்ளையர்கள் அங்கிருந்த சி.சிடிவி கேமராவின் ஹார்டிஸ்கையும் எடுத்துச் சென்று விட்டனர். இகு குறித்து அலுவலகத்தின் சூப்பர்வைசர் வெங்கடேஷ் (28) கொடுத்த புகாரில் வழக்குப் பதிவு செய்த பாடலூர் போலீசார், கை ரேகை, தடய அறிவியல் நிபுணர்களுடன் உதவியுடன் கொள்ளையர்களை அடையாளம் பணியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
15.08.2026 - 23:13:59
Privacy-Data & cookie usage: