குடியரசு தினம் : பெரம்பலூரில் கலெக்டர் கொடியேற்றி வைத்து, மரியாதை செலுத்தினர்.

schedule
2022-01-26 | 12:50h
update
2022-01-26 | 12:50h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Republic Day: Collector in Perambalur hoisted the flag and paid Salute.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள பாரத ரத்னா டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் 73வது குடியரசு தின விழாவினை முன்னிட்டு, கலெக்டர் வெங்கடபிரியா இன்று தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு பாதுகாப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட 169 அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும், சிறப்பாக பணி புரிந்தமைக்காக 19 காவலர்களுக்கு, தமிழக முதலமைச்சரின் பதக்கங்களையும் வழங்கி சிறப்பித்தார். அதனைத் தொடர்ந்து, தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கு கலெக்டர் சால்வை அணிவித்து கவுரவித்தார். சமாதானத்தைக் குறிக்கும் வகையில் வெண்புறாக்களை கலெக்டர் மற்றும் போலீஸ் எஸ்.பி ஆகியோர் பறக்கவிட்டனர்.

Advertisement

மேலும், கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு பாதுகாப்பு பணியில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக காவல் துறையைச் சேர்ந்த 34 நபர்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையை சார்ந்த 10 நபர்களுக்கும், மருத்துவ நலப் பணிகள் துறையைச் சேர்ந்த 14 நபர்களுக்கும், பொது சகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத் துறையைச் சேர்ந்த 54 நபர்களுக்கும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையைச் சேர்ந்த 5 நபர்களுக்கும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையைச் சேர்ந்த 10 நபர்களுக்கும், பேரூராட்சிகள் துறையைச் சேர்ந்த 7 நபர்களுக்கும், நகராட்சி நிர்வாகத் துறையை சேர்ந்த 5 நபர்களுக்கும், கால்நடை பராமரிப்புத் துறையை சேர்ந்த 6 நபர்களுக்கும், முன்னாள் படைவீரர் நலத் துறையைச் சேர்ந்த 1 நபருக்கும், பொதுப் பணித் துறையைச் சேர்ந்த 14 நபர்களுக்கும், கல்வித் துறையைச் சேர்ந்த 9 நபர்களுக்கும் என ஆக மொத்தம் 169 நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் போலீஸ் எஸ்.பி. மணி, டி.ஆர்.ஓ. அங்கையற்கண்ணி, பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன், ஆர்.டி.ஓ. நிறைமதி, டி.ஆர்.டி.ஏ லலிதா, பெரம்பலூர் நகராட்சி ஆணையாளர் குமரிமன்னன், சுகாதார பணிகள் துணை இயக்குநர் செந்தில்குமார், சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியர் சரவணன், முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 23:22:45
Privacy-Data & cookie usage: