பெரம்பலூரில் குடியரசு தினவிழா:  தேசிய கொடியை ஏற்றி வைத்து,  கலெக்டர் வெங்கடபிரியா  நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!

schedule
2023-01-26 | 04:59h
update
2023-01-26 | 05:00h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Republic Day in Perambalur: Hoisting the National Flag, Collector Venkatapriya offers welfare assistance!

இந்தியத்திருநாட்டின் குடியரசு தின விழாவை முன்னிட்டு பெரம்பலுார் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் விளையாட்டு மைதானத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழச்சியில், கலெக்டர் வெங்கட பிரியா தேசிய கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு, சுதந்திரப்போராட்ட தியாகிகள் வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் 94 பயனாளிகளுக்கு ரூ.10.26லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், சிறப்பாக பணிபுரிந்த 365 அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை போலீஸ் எஸ்.பி ஷியாமளா தேவி, டி.ஆர்.ஓ நா.அங்கையற்கண்ணி ஆகியோர் முன்னிலையில் வழங்கினார். தொடர்ந்து சமாதானத்தை குறிக்கும் வகையில் வெண் புறாக்களை பறக்க விட்டார்.

Advertisement

பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த 18 காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கங்களையும், 50 காவலர்களுக்கு நற்சான்றிதழ்களையும், கலெக்டர் வழங்கினார்.
ஆயுதப்படை ஆய்வாளர் அசோகன் தலைமையில் முதலாம் படைப்பிரிவிற்கும், ஆயுதப்படை உதவி ஆய்வாளர் பத்பநாபன் இரண்டாம் படைப்பிரிவிற்கும், ஆயுதப்படை உதவி ஆய்வாளர் சீமான் மூன்றாம் படைப்பிரிவிற்கும், ஆயுதப்படை உதவி ஆய்வாளர் சந்திரபோஸ் தலைமையேற்று நடத்தி சென்றனர். மேலும் ஊர்க்காவல் படை அணிவகுப்பை ஆல்பர்ட் தலைமையேற்று வழி நடத்தினார்.
முன்னாள் படைவீரர் நலத்துறையின் மூலம் போரை ஒத்த நடவடிக்கையில் உயிரிழந்த படைவீரரின் குடும்பத்திற்கு ரூ.25,000 மதிப்பிலான பராமரிப்பு மானியத்தையும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிக்கு ரூ.13,549 மதிப்பிலான திறன்பேசியினையும், தோட்டக்கலைத்துறையின் மூலம் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் மூலம் ஒருவருக்கு ரூ.75000 மதிப்பிலான மினி டிராக்டர் இயந்திரத்தையும், வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் ஒருவருக்கு ரூ.1.09லட்சம் மதிப்பிலான பவர் வீடர் கருவியினையும், ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் ஒருவருக்கு ரூ.5,580 மதிப்பிலான மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரத்தையும் என பல்வேறு துறைகளின் மூலம் மொத்தம் 94 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சத்து 26 ஆயிரத்து 228 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெெக்டர் வழங்கினார்.
Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.09.2026 - 05:42:31
Privacy-Data & cookie usage: