குடியரசு தினம்: அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம்

schedule
2017-01-24 | 02:19h
update
2026-06-25 | 14:36h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Republic Day: Meeting all the panchayats Gramma shaba

பெரம்பலூர் : குடியரசு தினத்தன்று பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம், ஊராட்சி மன்ற தனி அலுவலர்களால் நடத்தப்பட உள்ளது.

இக்கூட்டத்தில் ஏற்கெனவே நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைகள் குறித்தும், அனைத்து ஊராட்சிமன்ற தனி அலுவலர்கள் தாங்கள் செய்த செயல்பாடுகள் குறித்தும் இக்கூட்டத்தில் தெரிவித்திட வேண்டும். அரசு அலுவலர்கள் கிராம மக்களுக்கு என்னென்ன தேவை என்பதையும், அரசு நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகள் குறித்தும் மக்களிடையே இக்கூட்டத்தின் வாயிலாக கேட்டறிதல் வேண்டும்.

Advertisement

குடியரசு தினமான 26.01.2017 அன்று கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தாங்கள் வாக்காளர்களாக சார்ந்துள்ள கிராம ஊராட்சிகளில் பங்கேற்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இக்கூட்டத்தில் அரசு நலத் திட்டங்களை வழங்குதல் வேண்டும்.

கிராம சபைக் கூட்டம் நல்ல முறையில் சீரும் சிறப்புமாக நடைபெறுவதை கண்காணிக்க ஒவ்வொரு ஊராட்சிக்கும் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரால் (கி.ஊ) பற்றாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

வட்டாரம் வாரியாக மண்டல அலுவலர்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெறுவதை மேற்பார்வையிடவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குடியரசு தினமான 26.01.2017 அன்று கிராம சபைக் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளும், பொது மக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு கிராம ஊராட்சிகளின் வெளிப்படையான நிர்வாகத்திற்கு வழிவகுத்து தக்க ஒத்துழைப்பு தர வேண்டும், மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.06.2026 - 14:36:23
Privacy-Data & cookie usage: