அதிகாரிகளுக்குRequest to public authorities to take action to repair street lights near Perambalur
Request to public authorities to take action to repair street lights near Perambalur
பெரம்பலூர் அருகே உள்ள கீழக்கரை கிராமத்தில் தெருவிளக்குகள் ஒளிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழக்கரை கிராமத்தில் பழைய போஸ்ட் ஆபிஸ் அருகே உள்ள அட்சயகோபால் வீடு முதல் நடுபிள்ளையார் கோவில் வரையிலான தெரு முழுவதும் உள்ள மின் கம்பங்களில் விளக்குகள் இருந்தும் ஒளிராததால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்துள்ளனர். இது குறித்து பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் பழுது பார்க்காமல் உள்ளதால், அவ்வழியாக கடப்பவர்கள் கும்மி இருட்டில் தடுமாறுகின்றனர். மேலும் ஊரின் முக்கிய சாலையாக இருப்பதால், அடுத்த தெருக்களை இணைக்கும் சிறு தெருக்களையும் கொண்டு உள்ளது. அதோடு நாய்களும் இருட்டில் குறைப்பதால் யார் வருகிறார், யார் போகிறார்கள் என்பதை கூட அறிய முடியாமல் தெருவாசிகள் சிரமப் படுகின்றனர். அந்த தெருவில் அரசியல் பிரமுகர்கள், வணிகர்கள், விவசாயிகள், ஆசிரியர்கள், உள்ளிட்ட பல தரப்பினரும் குடியிருக்கின்றனர். மேலும் இந்த கும்மி இருட்டு சமூக விரோதிகளுக்கு சாதகமாக்கி கொள்வார்கள் என்பதால் உடனடியாக மின்விளக்குகளை சீர் செய்து ஒளிரச் செய்ய வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.