Request to the Collector to take action to provide drinking water to the people who come to petition for the public grievance redressal meeting!

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கலெக்டர் அலுலவங்களில் பொதுமக்களின் குறைகளை தீர்க்க திங்கட்கிழமை தோறும் , கலெக்டர் தலைமை வகித்து அனைத்துறை அதிகாரிகளுடன் மனுக்களை பெற்று, அதற்கான நடவடிக்கை அல்லது தீர்வை கூறுவார்கள். தற்போது கொரேனா ஊரடங்கிற்கு பிறகு, மாவட்ட கலெக்டர் தலைமையில் ஓரிரு வாரங்களாக பொதுமக்கள் குறைத்தீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த கூட்டத்திற்கு வருகை தரும், பொதுமக்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்து வருகின்றனர். தற்போது வெயிலும், மழையும் மாறி மாறி அடிப்பதால், அங்கு வருபவர்கள் தாகத்தால் தண்ணீர் குடி தேடி அலைகின்றனர். மேலும், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருத்த குடி தண்ணீர் டேங்கையும் காணவில்லை. சாதாரண பாமர மக்கள் குடிநீருக்காக தாகத்துடன் தண்ணீரை தேடி அல்லல்படுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் குறைதீர்க்கும் கூட்டம் நடத்த அனைத்து வசதிகளுடன் அரங்கம் இருந்தும், வெட்டவெளியில் நடத்த வேண்டும் என்பதற்காக வாகனங்கள் நிறுத்தும் கார் செட்டை சுமார் 3 – 4 மணி நேரத்திற்காக பல லட்சரூபாய் மதிப்பில் செலவு செய்து எல்.இ.டி. லைட்டுகள், மின்விசிறிகளுடன் மேஜை நாற்காலிகளுடன் கூட்டம் நடத்தும் போது, வரிகட்டும் மக்கள், புகார் கொடுக்க தாகம் தணிக்க குடிநீர் வழங்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!