பெரம்பலூரில் சுடுகாடு அருகே என்ஜினியர் சடலமாக மீட்பு!

schedule
2022-11-13 | 15:51h
update
2022-11-13 | 15:51h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Rescue of an engineer near the crematorium in Perambalur!

பெரம்பலூர் அருகே இன்று ஆத்தூர் ரோடு, சுடுகாடு பாலம் அருகே அடையாளம் தெரியாத நபர் இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற பெரம்பலூர் போலீசார் நடத்திய விசாரணையில், பெரம்பலூர் நகர் ரோஸ் நகரை சேர்ந்த கோபால் மகன் முருகேசன் (58), பொறியாளர் என்பதும், கட்டுமான தொழில் செய்து வருவதும் தெரியவந்தது. மேலும், போலீசார் நடத்திய விசாரணையில், இறந்து போனவர், நேற்று காலை 5.30 மணி அளவில் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றவர், வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால், குடும்பத்தினர் தீவிரமாக தேடி வந்துள்ளனர் என்பதும், தெரியவந்தது. இறந்து போன முருகேசன் மனைவி முத்துசெல்வி எசனை தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கோபிநாத், என்ற மகனும் மோனிஷா என்ற மகளும் உள்ளனர்.

Advertisement

சடலத்தை கைப்பற்றிய போலீசார், உடற்கூறு ஆய்விற்கு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.06.2026 - 07:52:18
Privacy-Data & cookie usage: