Residents picketed a bus near Perambalur demanding continuous power cuts and cleaning of drains!

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உள்ள அன்னமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட விசுவக்குடி கிராமத்தில் இன்று காலை, தொடர் வெட்டு மற்றும் கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யக் கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, பேருந்தையும் சிறைப்பிடித்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த அரசு பேருந்தை சிறைப்பிடித்து, மறியலில் ஈடுபட்டவர்கள் தரப்பில் தெரிவித்ததாவது:
விசுவகுடி கிராமத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. சில சமயங்களில் தொடர்ந்து 3 மணி நேரத்திற்கு மேலாக மின்தடை ஏற்படுகிறது. அருகில் உள்ள கிரசருக்கு மட்டும் மின் தடை இல்லாமல் சப்ளை செய்யப்படுகிறது. இதனால் விசுவகுடி கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. மேலும் விசுவகுடியில் சாக்கடைகளை சுத்தம் செய்யாமல் இருக்கிறார்கள். எனவே இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினர்.

தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு மின்சார துறை ஊழியர்கள், வருவாய்த்துறையினர்கள், ஊரக வளர்ச்சித் துறையினர்கள் மற்றும் அரும்பாவூர் போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்து முறையாக மின் சப்ளை வழங்கப்படும் எனவும், துப்புரவு பணியாளர்களைக் கொண்டு முறையாக கழிவுநீர் கால்வாய் சுத்தப்படும் சுத்தப்படும் எனவும் உறுதியளித்தனர்.

பின்னர், மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியலால் விசுவகுடி- பெரம்பலூர் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பள்ளி மாணவ மாணவியர்கள் உரிய நேரத்திற்கு பள்ளிக்குச் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.

விளம்பரம்: 


Copyright 2015 - © 2022 — Kaalaimalar | காலைமலர் | Tamil Daily News | தமிழ் நாளிதழ் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!