பிப்.15-ல் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியை வெற்றி பெற பெரம்பலூர் மாவட்ட திமுக கூட்டத்தில் தீர்மானம்

schedule
2021-02-09 | 04:02h
update
2021-02-09 | 04:02h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Resolution at the Perambalur District DMK meeting to win Stalin’s program in your constituency on Feb.15

பெரம்பலூர் மாவட்ட தி.மு.க.செயற்குழு கூட்டம், கட்சி அலுவலகத்தில், அவைத்தலைவர் அ. நடராஜன் தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் குன்னம் சி. இராஜேந்திரன் கலந்துகொண்டு, வருகிற 15- ம் தேதி பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்கள் சார்பில் அரியலூர், செந்துறை சாலையில் நடைபெறும் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வருகை குறித்து பேசினார். இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ம. இராஜ்குமார், மாநில நிர்வாகிகள் பா. துரைசாமி, டாக்டர் செ.வல்லபன், வி.எஸ்,பெரியசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என். ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் கி.முகுந்தன், பட்டுச்செல்விராஜேந்திரன், சிவக்குமார், மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில், மாவட்ட பொருளாளர் செ. இரவிச்சந்திரன், நகரச்செயலாளர் எம். பிரபாகரன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் என்.கிருஷ்ணமூர்த்தி, செ.அண்ணாதுரை, தி.மதியழகன், எஸ்.நல்லதம்பி, ஒன்றிய பொறுப்பாளர்கள் வீ. ஜெகதீசன், சோமு.மதியழகன், சி.ராஜேந்திரன், ஒன்றிய பெருந்தலைவர்கள் மீனாஅண்ணாதுரை, பிரபா செல்லப்பிள்ளை, க.ராமலிங்கம், துணைத் தலைவர்கள் சாந்தாதேவி குமார், எம்.ரெங்கராஜ், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Advertisement

கூட்டத்தில், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களில் இருந்தும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை வெற்றி பெற செய்வது எனவும், தமிழக அரசால் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்து அனைத்து வாக்காளர்களையும் சரி பார்த்து சேர்த்தல், நீக்கல் பணிகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், வரும் 2021சட்டமன்ற தேர்தலில் எதிரிகளின் அனைத்து வியூகங்களையும், முறியடித்து பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு தொகுதிகளையும் வெற்றி பெற செய்து துணைப் பொதுச்செயலாளர் ஆ. இராசா எம். பி.யின் கரங்களை வலுப்படுத்துவதோடு, மு.க.ஸ்டாலினை முதல்வராக்குவோம் என்று ஒவ்வொருவரும் இந்த கூட்டத்தில் உறுதிமொழி எடுத்துக் கொண்டு செயல் பட வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
15.06.2026 - 04:06:01
Privacy-Data & cookie usage: