பெரம்பலூரில் பணி நிரந்தரம் செய்ய கோரி ஆஷா பணியாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்!

schedule
2023-02-19 | 15:29h
update
2026-08-11 | 18:54h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Resolution in the meeting of Asha workers demanding to make the work permanent in Perambalur!

Advertisement

பெரம்பலூரில் ஆஷா பணியாளர்கள் சங்க மாவட்ட பேரவை கூட்டம் மாவட்ட தலைவர் மகாலட்சுமி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஞானசேகரன், மாவட்ட செயலாளர் ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் ஆஷா பணியாளர்களுக்கு காலம் வரை ஊதியம் வழங்க வேண்டும், ஆஷா பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின்படி மாதம் ரூ.21 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்க வேண்டும், ஓய்வூதியர்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதனப்டி மாவட்ட தலைவர் மகாலட்சுமி, மாவட்ட செயலாளராக செல்வாம்பாள், மாவட்ட பொருளாளராக மேகா, மாவட்ட துணை தலைவர்களாக சரிதா, சுமதி, மாவட்ட துணை செயலாளர்களாக அமுதா, ரேவதி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் ஆஷா பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
11.08.2026 - 18:54:59
Privacy-Data & cookie usage: