retired officer filed a complaint against the authorities doing ankapiratatcanam in Perambalur Collector office
பெரம்பலுார் மாவட்டம், வடக்கலுார் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவருக்கு, பொன்னுசாமி உட்பட 3 வாரிகள் உள்ளனர். ஓய்வு பெற்ற அரசு ஊழியரான பொன்னுசாமியின், அப்பா ராமலி்ங்கம் பெயரில்உள்ள, 44 சென்ட் நிலத்தை, இதே கிராமம் பழனிமுத்து மகன் தர்மலிங்கம் என்பவர், பட்டா மாற்றம் செய்து, வேறு நபருக்கு விற்பனை செய்துவிட்டார்.
இதைத்தொடர்ந்து, தனது பெயரில் நில பட்டா வழங்கக்கோரி குன்னம் தாசில்தாருக்கு பலமுறை மனு கொடுத்துள்ளார். இதுவரை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து, இன்று பெரம்பலுார் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், கையில் மனுவுடன் கலெக்டர் அலுவலக போர்ட்டிகோவில் பொன்னுசாமி அங்கபிரதட்சணம் செய்தார். பின்னர் மனு கொடுத்து வீடு திரும்பினார். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.