Revenue officials are demanding to repair the toilet in Ramanathapuram Collectorate office

ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கழிப்பறை வசதிகளை சரிசெய்து தரும் வரையிலும் வருவாய்த்துறையினரின் போராட்டம் தொடரும் என்றும், மேலும் 7 அம்ச கோரிக்கையை நிறைவேற்றக் கோரியும் வருவாய்த்துறையினர் வெளிநடப்பு போராட்டம் நடத்துவது ஆதரவு தெரிவித்து மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் வெளிநடப்பு மற்றும் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் வருவாய்த்துறை சங்கம் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதனை தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் புதிய கட்டடத்தில் உள்ள கழிப்பறை வசதிகளை சரிசெய்து தரும் வரை வருகை பதிவேட்டில் சுருக்கொப்பம் செய்தபின்னர் அலுவலக பணிகளை புறக்கணித்து வெளியேறி அலுவலக வளாகத்தில் கழிப்பறை முன்பு மாஸ்க் அணிந்து அமர்வது, இதற்கு ஆதரவு தெரிவித்த வருவாய்த்துறை அலுவலர்களும் அலுவலகத்தை விட்டு வெளியேறி அலுவலக வளாகத்தில் அமர்வது என முடிவு செய்தனர்.

மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் அவலநிலையை விளக்கி ஆதாரங்களுடன் தமிழக ஆளுனர், தமிழக முதல்வர், துணை முதல்வர், தலைமை செயலாளர், பொதுத்துறை செயலாளர், வருவாய்த்துறை அரசு செயலாளர் , முதன்மை ஆணையர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் உள்ளிட்ட உயர் அலுவலர்களுக்கு தகவல் அனுப்புவது,
வருவாய்த்துறையினரின் சங்கத்தின் கோரிக்கைகளை நிறைறவேற்றக்கோரி கலெக்டர் அலுவலகம், மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலக வாசல்களில் வருவாய்த்துறை சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம் ராமநாதபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில் ராமநாதபுரம் வட்டார தலைவர் செல்வராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பொருளாளர் வேல்முருகன், ராமநாதபுரம் தாசில்தார் சண்முகசுந்தரம், செயலாளர் குமரன், தமிழரசு, விஜயகுமார், இணை செயலாளர் மேகலா உட்பட பலர் பங்கேற்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!