பணிக்கு ஆசிரியர்கள் வராததை கண்டித்து பெரம்பலூர் அருகே இரு கிராமங்களில் சாலை மறியல்!

schedule
2019-01-29 | 05:36h
update
2019-01-29 | 05:57h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Road Blackcade near Perambalur, denying only one teacher! School siege in another village !!

பீல்வாடி

பெரம்பலூர் அருகே உள்ள பீல்வாடி கிராமத்தில் அரசு பள்ளி உள்ளது. அங்கு 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

கடந்த சில தினங்களாக ஆசிரியர்கள் ஜாக்டோ – ஜியோ அமைப்புடன் கோரிக்கைகளை வலியுறுத்தி, பணியை புறக்கணித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், அரசும் போராட்டங்களை சமாளிக்கும் வகையில், ஆசிரியர் பயிற்சி நிறுவன மாணவர்கள் மற்றும் தற்காலிக ஆசிரியர்களை பணி நியமனம் செய்து இன்று முதல் பள்ளிகளுக்கு அனுப்பி வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில், இன்று காலை பீல்வாடி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளிக்கு ஒரேஒரு ஆசிரியர், அவரும் உடற்கல்வி ஆசிரியர் என்பதால், ஆத்திரமடைந்த கிராமமக்கள் ஒன்று திரண்டு இன்று அவர்களது பள்ளிக்கு போதுமான ஆசிரியர்களை அனுப்பி வைக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சிறுவயலூர்

இதே போன்று ஆலத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுவயலூரில் பள்ளியை திறக்க கோரியும், பள்ளிக்கு ஆசிரியர்கள் பணிக்கு வராததை கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்தினர்.

பின்னர், அவ்வழியாக வந்த தனியர் பேருந்தை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சம்மந்தப்பட்ட காவல் துறையினர், வருவாய் துறையினர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கல்வி அலுவலர்கள் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக, உறுதி அளித்தன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.04.2026 - 22:14:36
Privacy-Data & cookie usage: