சாலைப் பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் வே.சாந்தா தொடங்கி வைத்தார்.

schedule
2020-01-20 | 16:59h
update
2020-01-20 | 17:15h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Road safety awareness rally in Perambalur ; Collector V Shantha inaugurated.

31-வது சாலைப் பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு போக்குவரத்துத்துறையின் சார்பில் இன்று மாலை பெரம்பலூரில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் .வே.சாந்தா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் கலந்து கொண்ட எம்.எல்.ஏக்கள், ஆர்.டி.இராமச்சந்திரன் (குன்னம்) ஆர்,தமிழ்ச்செல்வன் (பெரம்பலூர்), ஆகியோர் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினர்.

31-வது சாலைப் பாதுகாப்பு வார விழா ஜன.20 முதல் 27 வரை நடைபெற உள்ள நிகழ்ச்சிகள் வாயிலாக சாலை விதிகளை முறையாகப் பின்பற்றி வாகனங்களை இயக்க வேண்டும், சாலைகளை கடக்கும் போதும், வாகனங்களில் பயணிக்கும் போதும் மிகுந்த பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பது குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற உள்ளது.

Advertisement

அதன்படி இன்று முதலாவது நிகழ்ச்சியாக மகளிர் பங்குபெறும் வாகனப் பேரணியும் நடைபெற்றது. இப்பேரணியானது பாலக்கரையில் தொடங்கி ரோவர் வளைவு சென்று இறுதியாக பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் அருகில் நிறைவுபெற்றது.

பேரணியில் பெண் காவலர்கள், ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் பணிபுரியும் பெண்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுவினர் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சாலை விதிகளை முறையாக பின்பற்றவும், வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசக்கூடாது, மது அருந்தி வாகனம் ஓட்டக்கூடாது, தலைக்கவசம் உயிர்க்கவசம், படியில் பயணம் நொடியில் மரணம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும், ஒலிபெருக்கி வாயிலாக விழிப்புணர்வு பிரசாரமும் செய்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நகரை வலம் வந்தனர்.

டி.எஸ்.பிக்கள் கென்னடி, தேவராஜ், ரவி, வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந், அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் புகழேந்திராஜ், போலீஸ் இன்பெக்டர்கள் நித்யா, சுகந்தி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் செல்வகுமார், போக்குவரத்து ஆய்வாளர்கள் கோபிநாத், சௌந்தராஜன், கிளை மேலாளர் ஞானமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
11.07.2026 - 19:44:57
Privacy-Data & cookie usage: