Road works are done by Perambalur MLA. R. Tamilselvan visited.

பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தில் சாலை கட்டமைப்புகளை மேம்படுத்தவும், புதிய தார்சாலைகளை அமைக்கவும், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் விளாமுத்தூர் முதல் சிறுவாச்சூர் வரையுள்ள 2.02 கி.மீ. நீளமுள்ள சாலை ரூ.79.24 இலட்சம் மதிப்பீட்டிலும்,

வேலூர் முதல் மங்கூன் வரை 4.05 கி.மீ. நீளமுள்ள சாலை ரூ.141.68 லட்சம் மதிப்பீட்டிலும், ரூ.85.11 இலட்சம் மதிப்பீட்டில் அரணாரை முதல் ரெங்கநாதபுரம் வரை 3.50 கி.மீ. நீளமுள்ள சாலைப்பணிகள் உள்ளிட்ட 5 சாலைப் பணிகள் ரூ.4.50 கோடி மதிப்பீட்டிலும், ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தின் கீழ் 5 சாலைப் பணிகள் ரூ.1.00 கோடி மதிப்பீட்டிலும் மேற்கொள்ளப்பட உள்ள சாலைகளையும், நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1.06 கோடி மதிப்பில் 1 சாலைப் பணி, தமிழ்நாடு கிராம சாலை மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் 5 சாலைப் பணிகள் ரூ.2.38 கோடி மதிப்பீட்டிலும் மேற்கொள்ள ஏதுவாக கருத்துரு அனுப்பிவைக்கப்பட்டுள்ள சாலைகளையும், பெரரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்செல்வன் நேரில் பார்வையிட்டார்.

மேலும், நொச்சியம் முதல் புதுநடுவலூர் வரையுள்ள 2.20 கி.மீ நீளமுள்ள சாலை மிகவும் சேதமடைந்துள்ள தார்சாலையை சீரமைக்க தேவையான நடவடிக்ககைளை மேற்கொள்ளவும், சாலைப்பணிகளை விரைவாக முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் அறிவுரைகளை வழங்கினார்.

அப்போது மாவட்ட திட்ட அலுவலர் ஸ்ரீதர், வட்டார வளர்ச்சி அலுவலர் முரளிதரன், உதவி பொறியாளர் ஆனந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2022 — Kaalaimalar | காலைமலர் | Tamil Daily News | தமிழ் நாளிதழ் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!