ரூ.52.4 லட்சம் மதிப்பில் சாலைப் பணிகள் : போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

schedule
2022-04-10 | 11:31h
update
2022-04-10 | 11:32h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Road works worth Rs. 52.4 lakhs: Transport Minister Sivasankar started.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தொகுதிக்கு உட்பட்ட, ஆலத்தூர் ஒன்றியத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று, ரூ. 3.40 லட்சம் மதிப்பில்,
கொளத்தூர், கண்ணனூர், மால்வாய் செல்லும் சாலை அகலப்படுத்தும் பணியும், ரூ. 40 லட்சம் மதிப்பில் சா.குடிக்காடு -கொளக்காநத்தம் செல்லும் சாலையில்
சா.குடிக்காட்டில் ரூ.40 லட்சம் மதிபபில் மேம்பாலம் கட்டுதல், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து கொளக்காநத்தம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் ரூ.9 லட்சம் மதிப்பில், தார்சாலை அமைக்கும் பணிகளை இன்று தொடங்கி வைத்தார்.

Advertisement

பின்னர், கொளக்காநத்தம் பேருந்து நிலையம் அருகில் கோடை கால தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். அப்போது, ஆலத்தூர் சேர்மன் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் தழுதாழை பாஸ்கர், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் வெ.ரமேஷ், மாவட்ட கலை இலக்கிய பேரவை அமைப்பாளர் சுந்தர்ராஜ், கொளக்காநத்தம் ஊராட்சித் தலைவர் என்.ராகவன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வ.சுப்ரமணியன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.06.2026 - 12:35:39
Privacy-Data & cookie usage: