பெரம்பலூர் : பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட துறைமங்கலத்தில் ரோஜா நகர் பிரிவு சாலை அருகே அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு சிறுவர்கள் சிலர் உயிரிழந்ததுள்ளனர்.
இதனால், நேற்று முன்தினம் விபத்தில் சிக்கிய சிறுமி திவ்யா (வயது 12) நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இன்று அடக்கம் செய்யப்பட்டார். இதனால், ஆத்திரம் அடைந்த மக்கள் இன்று மாலை பெரம்பலூர் – திருச்சி சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி மிக விரைவில் வேகத்தடை அமைப்பதாக உறுதியளித்தன் பேரில் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சுமார் அரை மணி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.