பெரம்பலூர் அருகே தூங்கி கொண்டிருந்த தாய்

மகளிடம் 13 பவுன் தாலிக் கொடி பறிப்பு ; நள்ளிரவில் கொள்ளையர்கள் அட்டகாசம்!

schedule
2020-03-21 | 07:29h
update
2020-03-21 | 07:29h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Robbers at midnight in Perambalur, was sleeping near the mother – daughter 13 pounds of Jewels flush;

Advertisement

பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் அருகே உள்ள ஈச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சேவாங்கி மகன் ஜெயராமன் (வயது 55), விவசாயி. இவர் குடும்பத்துடன் நள்ளிரவு அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். அப்போது, காற்றோட்டத்திற்காக கதவை தாழ் போடாமல் சாத்திவைத்திருந்தனர். சுமார் 12 மணி அளவில் வீட்டினுள் புகுந்த கொள்ளையர்கள் தூங்கி கொண்டிருந்த, ஜெயராமனின் மகள் கவுசல்யா (வயது 24) அணிந்திருந்த ஏழரை பவுன் தாலிக் கொடியையும், ஜெயராமனின் மனைவி அன்பரசி அணிந்திருந்த ஐந்தரை பவுன் தங்க சங்கலியையும் கொள்ளையர்கள் பறித்தனர். அதற்கு விழித்த தாய் மகள் இருவரும் எழுப்பிய கூக்குரலில் அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து திருடனை பிடிக்க முயன்ற போது மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். தப்பி சென்றவர்களின் வயது 30 முதல் 35 வரை இருக்கலாம் என தெரிவித்து அவர்கள், இது குறித்து பெரம்பலூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.07.2026 - 17:50:52
Privacy-Data & cookie usage: