பெரம்பலூர் அருகே கோயிலில் கொள்ளை; போலீசார் விசாரணை!

schedule
2022-03-10 | 06:28h
update
2022-03-10 | 06:33h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Robbery at temple near Perambalur; Police investigation!

பெரம்பலூர் அருகே உள்ள கவுள்பாளையம் கிராமத்தில் பொதுமக்களுக்கு சொந்தமான மாரியம்மன் கோயில் உள்ளது. நேற்றிரவு வழக்கம் போல் பூஜைகள் முடிந்த பின்னர் கோயில் பூட்டப்பட்டு இன்று காலை திறக்க பூசாரி வந்து மின்விளக்குகளை அணைக்க வந்த போது கோயில் கதவு உடைக்கப்பட்டு, அங்கிருந்த உண்டியல் பூட்டை உடைத்து அதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்த ரொக்கம் களவாடி சென்றிருப்பது தெரியவந்தது. அதில் ரூ. 20 ஆயிரம் முதல் சுமார் 1 லட்சம் வரை இருக்கலாம் என அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.

Advertisement

இது குறித்து பெரம்பலூர் போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு தடய அறிவியல் நிபுணர்களுடன் வந்த போலீசார், வழக்குப் பதிவு செய்து, கொள்ளையர்கள் விட்டு சென்ற தடயங்களை வைத்து, அவர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்னர்.

இதே போன்று அப்பகுதியில் உள்ள காளியம்மன் கோயிலிலும். உண்டியலை கொள்ளையர்கள் உடைத்தனர். ஆனால், அதில் பணம் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பொதுமக்கள் அதிக அளவில் வசிக்கும் பகுதியில் அடுத்தடுத்து நடந்த கொள்ளை சம்பவங்கள் இன்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.09.2026 - 14:44:48
Privacy-Data & cookie usage: