பூட்டிய வீட்டில் 22 பவுன் ₹.4 லட்சம் கொள்ளை : பெரம்பலூர் போலீசார் தீவிர விசாரணை!

schedule
2021-09-09 | 19:59h
update
2021-09-09 | 19:59h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Robbery of 22 soviregon gold jewels ₹ .4 lakhs in the house: intensive investigation by the Perambalur police!

Advertisement

பெரம்பலூர் 4 ரோடு அருகே உள்ள எளம்பலூர் ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட ரிலையன்ஸ் பங்க் பின்புறம் அன்னை இந்திரா நகர் உள்ளது. அப்பகுதியில் வசித்து வருபவர் செல்லமுத்து
கருணாகரன் (47). மெக்கானிக்கான இவர் பெரம்பலூர் பாலகரை அருகே டூ வீலர் ஒர்க் ஷாப் வைத்துள்ளார்.
இன்று காலை 9:30 மணிக்கு தனது கடைக்கு சென்றுவிட்டதாகவும், அவரது மனைவி பானுமதி மற்றும் 2 மகன்கள் வெண்பாவூரில் உள்ள தனது அண்ணன் மகன் திருமணத்தில் கலந்து கொள்ள 12.30 மணிக்கு சென்றுவிட்டதாகவும் தான் 2 மணி போல் வந்து, வீட்டை பார்த்த பொழுது வீட்டின் கிரில் கேட் பூட்டை உடைத்து வீட்டின் முன்வாசல் கதவை கம்பியினால் நெம்பி கதவைத்திறந்து பீரோவில் நெம்பி லாகரில் இருந்த 5.5 பவுன் மற்றும் மேலே உள்ள கபோர்டு 16.5 பவுன் மொத்தம் வீட்டிலிருந்த 22 பவுன் மற்றும் 4 லட்சம் பணத்தை காணவில்லை. இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.08.2026 - 00:11:00
Privacy-Data & cookie usage: