ரோலர் ஸ்கேட்டிங் போட்டி : பெரம்பலூர் எம்.எல்.ஏ பதக்கங்களை வழங்கினார்.

schedule
2017-09-17 | 16:46h
update
2026-06-28 | 01:14h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Roller Skating Competition: Perambalur MLA awarded medals.

பெரம்பலூர் மாவட்ட அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டி இன்று பெரம்பலூர் மாவட்ட ஸ்கேட்டிங் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் 6 வயதிற்கு உட்பட்டோர், 6 முதல் 8 வயதிற்குட்பட்டோர், 8 முதல் 10 வயதிற்குடபட்டோர், 10 முதல் 12 வயதிற்குட்பட்டோர், 12 முதல் 14 வயதிற்குட்பட்டோர், 14 முதல் 16 வயதிற்குட்பட்டோர், மற்றும் 16 வயதிற்கு மேற்பட்டோர் என பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மொத்தம் 90 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Advertisement

இதில், வெற்றி பெற்றவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றவர்கள் ஆவார்கள். மேலும் வெற்றி பெற்ற முதல் மூன்று மாணவ மாணவிகளை தேர்வு செய்து பதக்கங்கள் வழங்கப்பட்டது.

இந்த போட்டியினை மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் சங்க தலைவர் அன்புதுரை மற்றும் காவல்துறை ஆய்வாளர் ரஞ்சனா ஆகியோர் தொடங்கி வைத்தனர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ரா.தமிழ்செல்வன் பதக்கங்களை வழங்கி பாராட்டினார். மேலும் இந்த நிழ்ச்சியினை பெரம்பலூர் மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் சங்க செயலாளர் ஆனந்த் ஏற்பாடு செய்து இருந்தார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
28.06.2026 - 01:14:49
Privacy-Data & cookie usage: