Rs .1.17 crore on behalf of the Department of Agricultural Engineering machinery and equipment provided to the farmers to the government.

agri-dept

வேளாண்மைப் பொறியியல் துறை 62 விவசாயிகளுக்கு ரூ.1.17 கோடி மதிப்பிலான ரூ.47.32 லட்சம் மானியத்துடனான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று வழங்கப்பட்டது.

வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் குறைந்த வாடகைக்கு வேளாண் கருவிகள் வழங்குதல், பண்ணைக்குட்டைகள் அமைத்தல், மானிய விலையில் வேளாண் கருவிகள் மற்றும் இயந்திரங்கள் வழங்குதல் மற்றும் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை திட்ட மையம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் விவசாயிகளுக்காக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி வேளாண் இயந்திரமயமாக்கல் உப இயக்கம் மற்றும் தேசிய வேளாண்மை வளா;ச்சி திட்டத்தின் கீழ் 9 விவசாயிகளுக்கு ரூ.14 லட்சத்து 81 ஆயிரத்து 800 மதிப்பிலான பவர் டில்லர்கள் ரூ.6 லட்சத்து 43 ஆயிரத்து 200 அரசு மானியத்துடனும், 19 விவசாயிகளுக்கு ரூ.20 லட்சத்து 78 ஆயித்து 900 மதிப்பிலான சுழல்கலப்பைகள் ரூ.9 லட்சத்து 790 ஆயிரத்து 50 அரசு மானியத்துடனும், 1 விவசாயிக்கு ரூ.93 ஆயிரம் மதிப்பிலான பவர் வீடர் ரூ.19 ஆயிரம் அரசு மானியத்துடனும், 1 விவசாயிக்கு ரூ.60 ஆயிரத்து 750 மதிப்பிலான விரை தெளிப்பான் ரூ.19 ஆயிரம் அரசு மானியத்துடனும், 1 விவசாயிக்கு ரூ.22 ஆயிரம் மதிப்பிலான தீவனப்புல் வெட்டும் கருவி ரூ.9 ஆயிரத்து 500 அரசு மானியத்துடனும், 28 விவசாயிகளுக்கு ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்து 800 மதிப்பிலான பேட்டரி மற்றும் பவர் ஸ்பிரேயர்கள் ரூ.61 ஆயிரத்து 940 மதிப்பிலான அரசு மானியத்துடன் கூடிய வேளாண் இயந்திரங்கள் விவசாயிகளுக்கு வழஙகப்பட்டது.

மேலும், பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை திட்ட மையத்தின் மூலம் ஸ்ரீ விஷ்ணு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை திட்ட மையத்திற்கு ரூ.26 லட்சத்து 68 ஆயிரத்து 531 மதிப்பிலான 7 வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் ரூ.10 லட்சம் அரசு மானியத்துடனும், ஸ்ரீ அம்மன் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை திட்ட மையத்திற்கு ரூ.10 லட்சம் அரசு மானியத்துடனும் ஸ்ரீ சத்யா வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை திட்ட மையத்திற்கு ரூ.25 லட்சத்து 31 ஆயிரத்து 494 மதிப்பிலான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் ரூ.10 லட்சம் மதிப்பிலுமான அரசு மானியத்துடன்கூடிய நலத்திட்டங்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர; வழங்கினார்.

ஆக, மொத்தம் 59 விவசாயிகள் மற்றும் 3 தொழில் முனைவோர் என 62 பயனாளிகளுக்கு ரூ.1.1726742 கோடி மதிப்பிலான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் ரூ.47.31690 லட்சம் அரசு மானியத்துடன் இன்று வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் அரசு பணியாளர்கள் உள்ளிட்ட உழவர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2022 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for Tamil Daily News - Kalaimalar.

error: Content is protected !!