நாமக்கல் திமுக விவசாய அணி சார்பில் கஜா புயல்பாதித்த பகுதிக்கு மரக்கன்றுகள்

schedule
2018-12-05 | 15:13h
update
2018-12-05 | 16:00h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Rs.2 Lakhs Worth Tree Plants in Gaja Cyclone affectted area Sent by Namakkal District DMK Agriculture Wing

நாமக்கல் மாவட்ட திமுக விவசாய அணி சார்பில் கஜா புயல் பாதித்த பகுதிக்கு ரூ. 2 லட்சம் மதிப்பீட்டில் மரக்கன்றுகள் அனுப்பி வைக்கப்பட்டது.

Advertisement

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக விவசாய அணி சார்பாக ரூ2 லட்சம் மதிப்பிலான 4ஆயிரம் மக்கன்றுகள் கஜா புயல் பாதித்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் ஆயிரத்து 600 தென்னங்கன்றுகள், ஆயிரத்து 200 மாங்கன்றுகள், ஆயிரத்து 200 கொய்யா கன்றுகள் ஆகும். இம்மரக்கன்றுகளை கஜா புயலால் பாதித்த புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டைக்கு மாவட்டபொறுப்பாளரும், மத்திய முன்னாள் இணை அமைச்சருமான காந்திசெல்வன் 2 வாகனங்களில் அனுப்பி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்டவிவசாயஅணிஅமைப்பாளர் நவலடி, நாமக்கல் நகர பொறுப்பாளர் ராணா ஆனந்த்,மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள் இளமதி, சாம்சம்பத், துணை அமைப்பாளர்கள் சத்தியபாபு, கப்பல்காரர் நவீன், நகர பொறுப்புக் குழு உறுப்பினர் செல்வமணி மோகனூர் ஒன்றிய விவசாயஅணிஅமைப்பாளர் தங்கவேல், மோகனூர் பேரூராட்சி முன்னாள் துணை செயலாளர் வரதராஜன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் இராஜகண்ணன், கிளை செயலாளர்கள் அன்பழகன், செல்லதுரை மற்றும் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags: Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.06.2026 - 04:03:14
Privacy-Data & cookie usage: