Rs.20.28 crores released as crop insurance compensation for 2020-21: Perambalur Collector!

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

பெரம்பலூர் மாவட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2021-22-ஆம் ஆண்டில் சிறப்பு பருவத்தின் கீழ் மக்காச்சோளம், பருத்தி, சின்ன வெங்காயம் மற்றும் நெல்(சம்பா) போன்ற பயிர்களை சாகுபடி செய்த விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து இருந்தனர்.

சென்ற ஆண்டு பெய்த தொடர் மழையின் காரணமாக பருத்தி, மக்காச்சோளம் மற்றும் சின்ன வெங்காயம் போன்ற பயிர்கள் சேதமடைந்தன. அதனை தொடர்ந்து பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு தற்பொழுது ரூ.20.28 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. மக்காச்சோளம் பயிருக்கு இழப்பீடாக ரூ.5.59 கோடி 2,649 விவசாயிகளுக்கும் மற்றும் பருத்தி பயிருக்கு இழப்பீடாக ரூ.36.20 லட்சம் 437 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நெல் சம்பா பயிருக்கு ரூ.69.02 லட்சம் இழப்பீடாக 1,158 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. சின்ன வெங்காயம் பயிருக்கு இழப்பீடாக ரூ.13.63 கோடி 2,751 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான சந்தேகங்களுக்கு வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் உள்ள வேளாண்மை அலுவலர்(பயிர் காப்பீடு) வெங்கடேஸ்வரன் (அலைபேசி எண். 86670 00272) தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2023 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!