Rs.4.19 crore welfare assistance in Perambalur: Tamil Nadu Transport Minister Sivasankar provided.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் 287 பயனாளிகளுக்கு ரூ.4.19 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கற்பகம் தலைமையில் வழங்கினார். பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் முன்னிலை வகித்தார்.

மக்கள் அரசு அலுவலர்கள் மீது வைக்கின்ற நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் ஒவ்வொரு துறை அலுவலர்களும் பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது உரிய விசாரணை செய்து விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டதன் காரணமாக இன்று வருவாய்த் துறையின் சார்பில் ரூ.47,34,000 லட்சம் மதிப்பீட்டில் 05 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களும், 50 பயனாளிகளுக்கு ஆதிதிராவிடர் இ- பட்டாக்களும்,

வருவாய் துறை (சமூக பாதுகாப்பு திட்டம்) சார்பில் ரூ.1,05,00,000 மதிப்பீட்டில் 22 பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகையும், 12 பயனாளிகளுக்கு விதவை உதவித் தொகையும், 35 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகையும், 01 பயனாளிக்கு முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியோர் உதவி தொகையும், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் ரூ.65,000 மதிப்பீட்டில் 13 பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகளும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் ரூ.38,353 மதிப்பீட்டில் 7 பயனாளிகளுக்கு மின் மோட்டார் உடன் கூடிய தையல் இயந்திரமும்,

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ரூ.11,100 மதிப்பீட்டில் 02 பயனாளிகளுக்கு தையல் இயந்திரமும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ. 23,300 மதிப்பீட்டில் 03 பயனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரமும், 1 பயனாளிக்கு காதொலி கருவியும், தொழிலாளர் நலத்துறை சார்பில் ரூ.25,000 மதிப்பீட்டில் 5 பயனாளிகளுக்கு கல்வி உதவித் தொகையும், வேளாண்மை துறை சார்பில் ரூ.20,210 மதிப்பீட்டில் 6 பயனாளிகளுக்கு மின்கல தெளிப்பான் மற்றும் தார்ப்பாய்களும், மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை சார்பில் ரூ.2,65,960 மதிப்பீட்டில் 25 பயனாளிகளுக்கு பேட்டரி தெளிப்பான் விசைத்தெளிப்பான் தார்பாலின் தையல் இயந்திரமும், வேளாண் பொறியியல் துறை சார்பில் ரூ.94,05,773 மதிப்பீட்டில் 5 பயனாளிகளுக்கு 40-70 ழஞ டிராக்டர்களும், 06 பயனாளிகளுக்கு 8 ழஞ பவர் டில்லர்களும், 01 பயனாளிக்கு கரும்பு அறுவடை இயந்திரமும், 5 பயனாளிகளுக்கு சூரிய மின் சக்தியுடன் கூடிய போர்வெல் அமைக்கவும், தோட்டக்கலைத் துறை சார்பில் ரூ.3,95,000 மதிப்பீட்டில் 04 பயனாளிகளுக்கு ஹbடிஎந 8ழஞ பவர் டில்லர்களும்,

2 பயனாளிகளுக்கு வெங்காய சேமிப்பு கிடங்கு அமைக்கவும், மகளிர் திட்டம் சார்பில் ரூ.5,80,000 மதிப்பீட்டில் 12 பயனாளிகளுக்கு பிரதம மந்திரியின் குடியிருப்பு திட்டம் மற்றும் சுழல் மேம்பாட்டு நிதிகளும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் ரூ.41,980 மதிப்பீட்டில் 20 பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பாக்கெட்களும், ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் ரூ.1,57,79,062 மதிப்பீட்டில் பாரதப் பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 25 பயனாளிகளுக்கும், 9 கிராம ஊராட்சிகளுக்கு டிராக்டர் வழங்குதல், 09 பயனாளிகளுக்கு மின் கலன் வண்டிகள் வழங்குதல், 02 ஒன்றிய குழு தலைவர்களுக்கு ஸ்கார்பியோ வாகனம் வழங்குதல் என மொத்தம் 287 பயனாளிகளுக்கு ரூ.4,18,84,738 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை போக்குவரத்து துறை அமைச்சரால் வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அரசு அலுவலர்கள், யூனியன் சேர்மன்கள் ஆலத்தூர் கிருஷ்ணமூர்த்தி, வேப்பூர் பிரபாசெல்லப்பிள்ளை, பெரம்பலூர் மீனா அண்ணாதுரை, வேப்பநதட்டை ராமலிங்கம், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2023 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!