வெண்பாவூர் தார்சாலை: பணியை எம்.எல்.ஏக்கள் தொடங்கி வைத்தனர்.
Rs. 6.72 crore: Valikandapuram – Venkavur Road: The MLAs have started the work today
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட வாலிகண்டபுரம் கிராமத்தில் இருந்து நெடுஞ்சாலை மற்றும் கிராம சாலைத்துறை மூலம் நபார்டு திட்டத்தின் கீழ் தார் சாலை அமைக்கும் பணியில் வாலிகண்டபுரத்திலிருந்து வெண்பாவூர் வரை செல்லும் தார்சாலை அமைப்பதற்கான பூமி பூஜையை சட்டமன்ற உறுப்பினர்கள் இரா.தமிழ்ச்செல்வன் (பெரம்பலூர்), ஆர்.டி.ராமச்சந்திரன் (குன்னம்) ஆகியோர் இன்று காலை தொடங்கி வைத்தனர்.
இத்திட்டம் சுமார் ரூ. 6 கோடியே 72 லட்சம் மதிப்பீட்டில் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வாலிகண்டபுரம், மேட்டுப்பளையம், சாத்தனவாடி, நெய்குப்பை, வெண்பாவூர் ஆகிய கிராமங்கள் வழியாக சுமார்15 கிலோ மீட்டர் தூரத்திற்கு தார்சாலை அமைவதன் மூலம் பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில், அதிமுக வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் என்.சிவப்பிரகாசம் மற்றும் பொதுமக்கள், அரசு பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.