காரை வட்டார தலைமை மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்கள் வழங்க ஆர்.டி.இராமச்சந்திரன் எம்.எல்.ஏ சட்டபசபையில் வலியுறுத்தல்!

schedule
2021-02-07 | 05:03h
update
2021-02-07 | 05:03h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

RT Ramachandran MLA urges Assembly to provide necessary equipment to Karai General Hospital!

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தொகுதிக்கு உட்பட்ட காரை வட்டார தலைமை மருத்துவ மனைக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் வழங்க வேண்டும் என எம்.எல்.ஏ ஆர்.டி.இராமச்சந்திரன் சட்டசபையில் வலியுறுத்தி பேசியதாவது:

குன்னம் தொகுதிக்குட்பட்ட ஆலத்தூர் ஒன்றியம், காரை ஊராட்சியில் இயங்கி வந்த மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த ஒராண்டுக்கு முன்பு வட்டார தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இதன் அருகில் உள்ள கொளக்காநத்தம் கிராமத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டது.

Advertisement

காரை அரசு ஆரம்ப சுகாதார நிலையிலிருந்த மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் கொளக்காநத்ததிற்கு எடுத்து செல்லப்பட்டுவிட்டது. இதனால் காரை வட்டார தலைமை மருத்துவமனையில் தேவையான உபகரணங்கள் இல்லாததால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கிடைத்த மருத்துவ சேவையைக் கூட இப்போது மருத்துவர்களால் வழங்க முடியாமல் இருக்கிறார்கள். மேலும் மருத்துவ சேவை கூட பெற முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே இன்னும் ஒரு மாத காலத்திற்குள் காரை வட்டார தலைமை மருத்துவமனைக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் வழங்கி காரை மற்றும் ஆலத்தூர் வட்டார கிராம மக்கள் மருத்துவ சேவையை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதற்கு பதில் அளித்து சுகாதார துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் பேசியதாவது: காரை வட்டார தலைமை மருத்துவமனைக்கு இன்னும் ஒரு அல்லது இரண்டு வாரங்களிலேயே அனைத்து உபகரணங்களும் வழங்கி மருத்துவ சேவை மேம்படுத்தப்படும் என தெரிவித்தார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
15.06.2026 - 04:05:58
Privacy-Data & cookie usage: