Rural postal worker demonstrated at Ramanathapuram

ராமநாதபுரம் அஞ்சல்துறை கோட்ட கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் ஏழாவது ஊதிய குழுவில் கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு அமைக்கப்பட்ட கமலேஷ் சந்திரா கமிட்டி அறிக்கையின்படி சாதகமான பரிந்துரைகளை உடனடியாக அமுல்படுத்திட வேண்டும்.

கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு கணக்கு நிர்ணயம் செய்து மிரட்டும் போக்கை கைவிட வேண்டும். சம்பளம் குறைப்பு செய்து முன் தேதியிட்டு பிடித்தம் செய்வதை நிறுத்திட வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு கோட்ட தலைவர் சேகர் தலைமை வகித்தார். முதன்மை ஆலோசகர் ஜான்பிரிட்டோ முன்னிலை வகித்தார். கோட்ட செயலாளர் இளையராஜா கோரிக்கைகளை விளக்கி பேசினார். கோட்ட பொருளாளர் ராமமுர்த்தி உட்பட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

– சிவசங்கரன், ராமநாதபுரம்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!