பெரம்பலூர் அருகே கணவன் இறந்த துக்கம் தாளாமல் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை!

schedule
2020-06-05 | 12:41h
update
2020-06-05 | 12:41h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Sadness at the death of her husband could not bear himself burnt a Elderly woman!

Advertisement

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூர் அருகே உள்ள தழுதாழை கிராமத்தைச் சேர்ந்த துரைசாமி மனைவி ஜெகஜோதி(75) என்பவர் அவரது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற வைத்து கொண்டு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த அரும்பாவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூதாட்டி ஜெகஜோதியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ஜெகஜோதியின் கணவர் துரைசாமி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உடல் நலக்குறைவால் உயிரிழந்த துக்கம் தாளாமல் ஜெகஜோதி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது.
இவருக்கு திருமணமான இரண்டு மகள்களும், ஒரு மகனும், உள்ளனர் என்பது குறிப்பிட்டத்தக்கது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.07.2026 - 19:16:27
Privacy-Data & cookie usage: