Sale of state-owned multi-acre land near Perambalur Officers are investigating!

பெரம்பலூர் அருகே அரசுக்கு சொந்தமான பலஏக்கர் நிலம் நிலம் பட்டாமாற்றம் செய்து தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளதால், குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம் சிறுவயலூர் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட மங்கூனில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. சிறுமலைக்குன்றுகள் சூழ அமைந்துள்ள இந்த பள்ளிக்கு அருகில் பலஏக்கர் நிலம் பள்ளியின் தரம் உயர்த்துதல் மற்றும் எதிர்கால விரிவாக்கத்திற்காக வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலத்தை கடந்த சிலஆண்டுகளுக்கு முன்பு பணிபுரிந்த கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் உடந்தையுடன் தனியாருக்கும், செல்வந்தர்களுக்கும் விற்பனை செய்யப்பட்டு பட்டா வழங்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து உயர்மட்ட குழு அமைத்து உரிய விசாரணை நடத்தி, தனியாருக்கு பட்டா செய்துகொடுக்கப்பட்ட அரசு நிலத்தை கைப்பற்றி மீட்டு, பள்ளியின் விரிவாக்கத்திற்காக வழங்கவேண்டும் என்றுகோரி, மங்கூனைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வேல்முருகன், முதல்அமைச்சரின் தனிப்பிரிவிற்கு புகார் மனு அனுப்பினார்.

இந்த புகார்மனு குறித்து உரிய விசாரணை நடத்திடுமாறு, முதல்அமைச்சரின் தனிப்பிரிவில் பெரம்பலூர் மாவட்ட வருவாய்த்துறையினருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் சுப்பையா, ஆலத்தூர் தாசில்தார் ஷாஜகான், சிறுவயலூருக்கு சென்று மங்கூன் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு அருகே கட்டப்பட்டுள்ள வீடுகள், கட்டிடங்களின் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Copyright 2015 - © 2020 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | NEWS : kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for Tamil Daily News -Kalaimalar.

error: Content is protected !!