Samathuva Pongal Festival in Syed Ammal Arts and Science College students, Ramanathapuram


ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக நடந்தது.

ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

கல்லுாரியில் பயிலும் மாணவிகள், கல்லுாரி பேராசிரியைகள், உதவி பேராசிரியைகள் ஆகியோர் சேர்ந்து சமத்துவ பொங்கல் வைத்து தமிழர் திருநாளை கொண்டாடினர். பொங்கல் பொங்கி வந்தபோது பொங்கலோ பொங்கல் என குரல் எழுப்பியும் குலவையிட்டும் மகிழ்ந்தனர்.

முன்னதாக கல்லுாரி வளாகத்தில் கல்லுாரி மாணவிகளுக்கான ரங்கோலி போட்டி நடந்தது. இப்போட்டிக்கு கல்லுாரியில் கம்ப்யுட்டர் துறை தலைவி மாலதி, ஆங்கிலத்துறை தலைவி யோகலட்சுமி ஆகியோர் நடுவராக இருந்து போட்டியை சிறப்பாக நடத்தினர்.

இதேபால் மாணவிகளுக்கான கயிறு இழுக்கும் போட்டி கல்லுாரி மைதானத்தில் நடந்தது. இதில் அனைத்து துறை மாணவிகளும் துறைவாரியாக போட்டியில் பங்கேற்று கயிறு இழுத்தனர். கயிறு இழுக்கும் போட்டியில் தகவல் தொழில்நுட்ப துறை தலைவர் வினோத்குமார், வணிகவியல் துறை தலைவர் செல்வம் ஆகியோர் நடுவராக இருந்தனர்.

சமத்துவ பொங்கல் விழாவில் கல்லுாரி தாளாளர் ராஜாத்தி தலைமை வகித்து மாணவிகளுக்கு பொங்கல் மற்றும் கரும்பு வழங்கி கொண்டாடினார். விழாவில் முதல்வர் அமானுல்லா ஹமீது, நிர்வாக அதிகாரி சாகுல் ஹமீது உட்பட பலர் பங்கேற்றனர்.

சமத்துவ பொங்கல் விழாவில் பங்கேற்ற கல்லுாரி மாணவிகள் அனைவரும் தமிழர் பாரம்பரியத்தின்படி சேலை அணிந்து வந்து ஜாதி மதம் மறந்து ஒருவருக்கொருவர் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து சமத்துவ பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடினர்.

கல்லுாரி தாளாளர் ராஜாத்தி மாணவிகளுடன் சேர்ந்து பொங்கல் சாப்பிட்டு மாணவிகளுக்கு தாளாளரும், தாளாளுருக்கு மாணவிகளும் வாழத்துக்கள் தெரிவித்து மகிழ்ந்தனர். மாணவிகள் அனைவருக்கும் கல்லுாரி சார்பில் கரும்பு வழங்கப்பட்டது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!