சட்டவிரோதமாக குடிநீர் உறிஞ்சிய 55 மின் மோட்டார்கள் பறிமுதல்

schedule
2017-04-05 | 17:03h
update
2026-06-25 | 07:48h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Sapped drinking illegally seized 55 electric motors near in perambalur


பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் வீடுகளில் சட்டவிரோதமாக மின் மோட்டார்களை வைத்து தண்ணீர் உறிஞ்சிய வீடுகளில் இருந்து 55 மோட்டார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்

பெரம்பலூர் மாவட்டத்தில் சீராக குடிநீர் விநியோகிக்கவும் சட்ட விரோதமாக மின் மோட்டார் இணைத்து குடிநீர் உறிந்தவதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும் தாசில்தார் , பிடி ஒ, மண்டல வளர்ச்சி அலுவலர்கள், போன்ற வருவாய் துறை அதிகாரிகளை கொண்ட குழு குன்னம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது

Advertisement

வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழப்புலியூர் கிராமத்தில் உள்ள வீடுகளில் சட்ட விரோதமாக மின் மோட்டார்கள் வைத்து தண்ணீர் உறிஞ்சபடுகிறது என்றும் இதனால் எங்களக்கு சீரான குடிநீர் விநியோகம் இல்லை என்று கிராம பொதுமக்கள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியருக்கு புகார் தெரிவித்துள்ளனர்.

இதனை கண்காணிக்க பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் கீழப்புலியூர் நேற்று காலை வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில், முரளிதரன் , மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சித்தார்த்தன், ஆகியோர் வீடுகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது சுமார் 55 -க்கும் மேற்பட்ட வீடுகளில் சட்டத்திற்கு புறம்பாக மின் மோட்டார்களை வைத்து குடிநீர் உறிஞ்சபடுவதை கண்டு பிடித்து அந்த மின் மோட்டார்களை பறிமுதல் செய்தனர்

மேலும் அலுவலர்கள் கூறுகையில் இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

ஊராட்சி செயலர்கள் கீழப்புலியூர் பழனிவேல், எழுமுர் ராஜா, சிறுமத்தூர் தேவேந்திரன், உட்பட பலர் உடனிருந்தனர் மேலும், மங்களமேடு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.06.2026 - 07:49:01
Privacy-Data & cookie usage: