பெரம்பலூர் அருகே பயங்கரம்: பணிக்கு சென்ற ஆசிரியை குத்தி கொன்ற காதலன்!

schedule
2018-08-14 | 08:32h
update
2026-04-13 | 02:17h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Scary near Perambalur: The boyfriend who killed the teacher

பெரம்பலூர் அருகே இன்று காலை பள்ளிக்கு பணிக்கு சென்று கொண்டிருந்த ஆசிரியை கத்தியால் காதலன் குத்தி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் உள்ள மாலா நகரை சேர்ந்தவர் ஷேட்டு . ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். அவரது மகள் கமருன்னிசா (வயது 27). இவர் ஆசிரியராக அல்லிநகரம் அருகே உள்ள இலந்தங்குழியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.

பள்ளிக்கு அல்லிநகரம் வரை பேருந்திலும், பின்னர் அங்கிருந்து 4. கி.மீ தூரமுள்ள இலந்தங்குழி கிராமத்திற்கு மொபட்டிலும் செல்வது வழக்கம். இன்று வழக்கம் போல் பள்ளிக்கு அல்லி நகரத்திற்கும் இலந்தங்குழிக்கும் இடையில் உள்ள ஓடை பாலத்தில் சென்று கொண்டிந்த போது வழிமறித்த இரு வாலிபர்கள் ஆசிரியையிடம் வாக்குவாதம் செய்து தகராறு செய்தனர்.

Advertisement

திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் முகத்தை கீறிய அவர்கள் கமருன்னிசாவின் கழுத்தில் குத்தினர், அப்போது அவ்வழியாக வந்த பொதுமக்கள் வாலிபர்கள் இருவரையும் பிடித்து தர்மஅடி கொடுத்தனர். அதில் ஒருவன் தப்பி ஓடிவிட்டான். குன்னம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கத்தியால் குத்தியவனை கைது செய்து நடத்திய விசாரணயைில் பெரம்பலூர் பாரதிதாசன் நகரை சேர்ந்த செல்லமுத்து மகன் ஆனந்த் என்பது தெரியவந்தது.

ஆனந்த் கிருஷ்ணாபுரத்தில் பேட்டரி கடை நடத்தி வருவதாகவும், அவர் அளித்த வாக்குமூலத்தில் கமருன்னிசாவும், ஆனந்தும் 2006 ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்ததாகவும், தற்போது திருமணத்திற்கு மறுத்ததாகவும், அதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கத்தியால் குத்தி கொன்றதாகவும் தெரிவித்தார்.

மேலும், உடன் வந்து தப்பி ஓடியது ஆனந்தின் நண்பன் அப்பார்க் என்பதும் தெரியவந்தது. தப்பி ஓடிய அப்பார்க்கை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பட்டப்பகலில் ஆசிரியை காதலன் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
13.04.2026 - 02:17:56
Privacy-Data & cookie usage: