சிறுபான்மையினர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை : பெற கால நீட்டிப்பு: பெரம்பலூர் கலெக்டர் தகவல்!

schedule
2022-10-06 | 15:26h
update
2022-10-06 | 15:26h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Scholarship for Minority Students : Extension of Time to Get: Perambalur Collector Info!

தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளில் 1 வகுப்பு முதல் 10 வகுப்பு வரை பயிலும் இஸ்லாமிய, கிறித்துவ, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் மதங்களைச் சார்ந்த மாணவ / மாணவியர்களிடமிருந்து 2022-2023 ஆம் ஆண்டிற்கு ஒன்றிய அரசின் பள்ளிபடிப்பு, கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் (புதியது மற்றும் புதுப்பித்தல்) உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் www.scholarships.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க 15.10.2022 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே தகுதி வாய்ந்த சிறுபான்மையின மாணவ / மாணவியர்கள் மேற்படி காலக்கெடுவிற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

Advertisement

மேலும், அனைத்து கல்வி நிலையங்களும் சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை கோரி மாணவ / மாணவியர்களிடமிருந்து வரப்பெற்ற விண்ணப்பங்களை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் சரிபார்க்க வேண்டும் எனவும், தகுதியுள்ள சிறுபான்மையின மாணவ / மாணவியரின் விண்ணப்பத்தினை சரிபார்ப்பதில் சுணக்கம் காட்டும் / தவறும் கல்வி நிலையங்களின் மீது அரசால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பள்ளிபடிப்பு உதவித் தொகையினை சரிபார்க்க 31.10.2022அன்று கடைசி நாளாகும் என அறிவுறுத்தப்படுகிறது.

இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம், என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.06.2026 - 02:23:04
Privacy-Data & cookie usage: