BC, MBC, DNT வகுப்பை சார்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை; பெரம்பலூர் கலெக்டர் தகவல்!

schedule
2023-10-12 | 14:43h
update
2023-10-12 | 18:08h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Scholarship for students belonging to BC, MBC, DNT category; Perambalur Collector Information!

அரசு, அரசு உதவிப்பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட (பிவ), மிகப்பிற்படுத்தப்பட்ட (மிபிவ) மற்றும் சீர்மரபினர் (சீம) மாணவ,மாணவியருக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

Advertisement

முதுகலை, பாலிடெக்னிக் தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ2,50,000 க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

நடப்பாண்டில் புதுப்பித்தல் மாணாக்கர்கள் https://ssp.tn.gov.in என்ற இணையதள முகவரியில் Student login சென்று ஆதார் எண் அளித்து e-KYC Verification செய்ய வேண்டும். இதில் ஏதாவது இடர்பாடு ஏற்படும் பட்சத்தில் தங்கள் கல்லூரியில் உள்ள கல்வி உதவித்தொகை உதவியாளரை ஆதார் எண் நகலுடன் அணுகவும்.

கல்வி உதவித்தொகை இணையதளம் (Scholarship portal) புதுப்பித்தலுக்கு (Renewal) 18.10.2023 முதல் செயல்பட துவங்கும். புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்கள் மாணவர்களால் 18.11.2023-க்குள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு தங்கள் கல்லூரியில் உள்ள கல்வி உதவித்தொகை உதவியாளரையோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தையோ அணுகி பயன்பெறலாம் என பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.08.2026 - 03:06:24
Privacy-Data & cookie usage: