பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட

சீர்மரபின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை!

schedule
2020-09-20 | 02:05h
update
2026-06-18 | 07:17h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Scholarships for B.C., M.B.C., DNC Community students! Perambalur Collectorate Notice

பெரம்பலூர் கலெக்டர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல் :

அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் (பி.சி, எம்.பி.சி, டி.என்.சி) மாணவ, மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.

Advertisement

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்டு மற்றும் சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த மாணவஃமாணவியருக்கு எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 லடசத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மாணவ – மாணவியர்கள் கல்வி உதவித்தொகை கோரிய விண்ணப்ப படிவங்களை அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று 10.11.2020க்குள் புதுப்பித்துக்கொள்ளலாம்.

புதியதாக விண்ணப்பிப்பவர்கள் 30.11.2020க்குள்ளும் பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்கள் தங்களின் வங்கி கணக்கு எண் மற்றும் விவரங்களை தவறாது குறிப்பிட வேண்டும்.

சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் 15.11.2020 ஆம் தேதியில் துவங்கும், கல்வி உதவித்தொகை இணையதளத்தில் புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களை 15.12.2020ஆம் தேதிக்கு முன்பும், 16.12.2020-ம் தேதியில் துவங்கும் புதியதிற்கான விண்ணப்பங்களை 31.01.2021ஆம் தேதிக்கு முன்பு இணையதளம் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியா; அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகவும். மற்றும் அரசு இணையதளம் www.tn.gov.in/bcmbcdept-ல் இத்திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் உள்ளது என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.06.2026 - 07:17:39
Privacy-Data & cookie usage: