மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை : பெரம்பலூர் கலெக்டர்!

schedule
2021-08-25 | 14:47h
update
2021-08-25 | 14:47h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com


Scholarships for students studying in Central Government Educational Institutions: Perambalur Collector!


பெரம்பலூர் கலெக்டர் வெங்கட பிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐம், ஐஐஐடி , என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக் கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ,மாணவிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 இலட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக மாணவர் ஒருவருக்கு ஆண்டிற்கு ரூ.2 இலட்சம் வரை வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

Advertisement

கல்வி உதவித்தொகைக்கு 2021-2022ம் கல்வி ஆண்டிற்கான புதியதாக விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவர்கள் கீழ்கண்ட முகவரியிலுள்ள இயக்ககத்தையோ அல்லது ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களையோ அணுகி விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும் www.perambalur.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தினை பரிந்துரை செய்து இயக்குநர் பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், எழிலகம் இணைப்பு கட்டடம், 2வது தளம், சேப்பாக்கம், சென்னை-5, என்ற முகவரிக்கும், tngovtiitscholarship@gmail.com என்ற மின்னஞ்சலுக்கும் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 30.11.2021க்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும், ஏதேனும் விபரங்களுக்கு 044-28551462 என்ற தொலைபேசி எண்ணின் வாயிலாகவோ தொடர்பு கொண்டு தேவையான பெற்றுக் கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 08:22:55
Privacy-Data & cookie usage: