பெரம்பலூரில் பள்ளி பேருந்துகள் மோதல்; சுமார் 20 மாணவர்கள் காயம்! ஓட்டுனர் கைது!!

schedule
2020-01-30 | 17:02h
update
2020-01-30 | 17:13h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

School buses collide in Perambalur About 20 students injured

பெரம்பலூரில் பள்ளி பேருந்து மீது மற்றொரு பள்ளி பேருந்து மோதி விபத்து: சுமார்20 மாணவர்கள் படுகாயம்

Advertisement

இன்று காலை, அதிவேகமாக வந்த தனியார் பள்ளி பேருந்து மற்றொரு பள்ளிப்பேருந்தின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானதில், சுமார் 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் காயமடைந்தனர்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை பகுதியிலிருந்து வந்த (ராமகிருஷ்ணா) தனியார் பள்ளி பேருந்து, ஆத்தூர் ரோடு சாலையில் காவல் நிலையம் எதிரே நின்று கொண்டிருந்த (பனிமலர்) தனியார் பள்ளி பேருந்தின் பின்னால் பிரேக் பிடிக்காமல் இடித்ததால் 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் படுகாயமடைந்து, பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தியதில்,

நின்று கொண்டிருந்த தனியார் பள்ளி பேருந்தின் பின்னால் மோதி விபத்து ஏற்படுத்திய மற்றொரு பள்ளி பேருந்து ஓட்டுநர் வெங்கடேஷ் பெரம்பலூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
11.07.2026 - 21:59:17
Privacy-Data & cookie usage: