போதிய இடம் இல்லாததால், கூடுதல் பேருந்து கேட்டு, பள்ளி மாணவர்கள் பெரம்பலூர் அருகே சாலை மறியல்! அதிகாரிகள் தொடர் அலட்சியம்!!

schedule
2022-09-20 | 18:10h
update
2022-09-20 | 18:10h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

School students block road near Perambalur, asking for extra bus due to lack of space! Officials continued negligence!!

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டத்திற்கு உட்பட்ட செட்டிக்குளம் அருகே மாவிலங்கை கிராமத்தில் இருந்து, நக்கசேலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் படித்து வருகின்றனர். பள்ளிக்கு செல்ல, பேருந்தில் மாணவர்களுக்கு போதுமான இடம் இல்லாததால், படிகளிலும், மேற்கூரையிலும் செல்கின்றனர்.

Advertisement

சில மாதங்களுக்கு பஸ் படியில் தொங்கி சென்ற மாணவி தவறி விழுந்ததில், கால்முறிவு ஏற்பட்டது. தொடர்ந்து மாணவர்கள் பெரும் சிரமம் அடைந்து வந்ததை பல தொகுதி எம்.எல்.ஏ மற்றும் போக்குவரத்து அதிகாரிகளுக்கு கோரிக்கை மனுக்கள் கொடுத்தும், நடவடிக்கை எடுக்கப்படாததை கண்டித்து இன்று மாணவர்கள் எதுமலையில் இருந்து பெரம்பலூர் செல்லும் அரசு பஸ்சை சிறைப்பிடித்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து, தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு அவர்களிடம், பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தன் பேரில் கலைந்து சென்றனர்.

மக்கள் பெருக்கம், மாணவர்கள் அதிகரிப்பை கணக்கில் கொண்டு, கூடுதல் பேருந்துகளை இயக்க அதிகாரிகள் முன்வரவேண்டும் என மாணவர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்:

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.06.2026 - 22:46:10
Privacy-Data & cookie usage: