பள்ளிக்கல்வித்துறையின் அறிவியல் கண்காட்சி : மாணவர்கள், பொதுமக்களுக்கும் அனுமதி

schedule
2016-10-15 | 00:47h
update
2026-06-24 | 05:22h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

School’s Science Fair, students, the public and allows

மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் க.முனுசாமி விடுத்துள்ள அழைப்பு :

பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் ஆண்டுதோறும் மாணவ-மாணவியரின் படைப்பாற்றலை வெளிக்கொணரும் வகையில் மாவட்டந்தோறும் அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டு வருகின்றது.

2016-17ஆம் கல்வி ஆண்டிற்கான 44-வது ஐவஹர்லால் நேரு மாவட்ட அளவிலான அறிவியல்-கணித-சுற்றுப்புறக் கண்காட்சி அறிவியல் பெருவிழா பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை (15.10.2016) காலை 9.00 மணி முதல் மாலை 5.00 வரை நடைபெற உள்ளது.

Advertisement

இக்கண்காட்சியில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 140 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து, ஒரு பள்ளிக்கு ஒரு படைப்பு வீதம் 140 விதமான அறிவியல் படைப்புகளை மாணவ-மாணவிகள் காட்சிப்படுத்த உள்ளனா;.

மேலும் பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் பிறந்த தினமான அக்டோபர் 15ஆம் நாளில் இளைஞர் எழுச்சி நாள் விழாவாகவும் இணைந்து நடத்தப்பட உள்ளது.

இவ்விழாவில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சிப் பணியாளர், பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
இவ்விழாவினை பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு மாணவர்களை உற்சாகப்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.06.2026 - 05:22:18
Privacy-Data & cookie usage: