மாணவர்களுக்கான அறிவியல் விழிப்புணர்வு களப்பயணம் : ஆட்சியர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

schedule
2016-01-28 | 08:36h
update
2026-04-22 | 18:18h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

அரசுப்பள்ளிகளில் பயிலும் 250 க்கும் மேற்ப்பட்ட மாணவ, மாணவிகளின் அறிவியல் விழிப்புணர்வு களப்பயணத்தை மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பாக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அறிவியல் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக திருச்சியில் உள்ள அறிஞர் அண்ணா அறிவியல் கோளாரங்கத்தை பார்வையிடுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்ட அறிவியல் விழிப்புணர்வு களப்பயணத்தை மாவட்ட ஆட்சியர் நந்தகுமார் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.

Advertisement

அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் அறிவியல் ஆர;வத்தை ஊக்கப்படுத்திடும் வகையில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த எட்டாம் வகுப்பு பயிலும் சுமார் 200 க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் மற்றும் 5 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம், 40 ஆசிரியர்களும், பேரளி கஸ்தூரிபாய் காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிட பள்ளியை சேர்ந்த 50 மாணவிகளுடன் 10 ஆசிரியர்களும் 5 க்கும் மேற்பட்ட பேருந்துகளில் திருச்சியிலுள்ள கோளாரங்கத்தை பார்வையிட்டு அதன் செயல்பாடுகளை தெரிந்து கொள்வதற்கான அறிவியல் விழிப்புணர்வு களப்பயணம் மேற்கொண்டனர்.

இந் நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் (அனைவருக்கும் கல்வி இயக்கம்) கணேசன், உதவி திட்ட அலுவலர் பாஸ்கர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் எலிசபெத், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாலதி, கார்த்திக் உள்ளிட்டோருடன் ஆசிரியர்கள் மற்றும் மாணவ,மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
22.04.2026 - 18:18:25
Privacy-Data & cookie usage: