SDAT ஊக்க உதவி தொகை பெற தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்

பெரம்பலுர் மாவட்ட விளையாட்டு, இளைஞர் நலன் அலுவலர்

schedule
2016-08-29 | 19:39h
update
2026-09-23 | 05:22h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

SDAT is eligible to receive the incentive to apply for scholarships in perambalur District
பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ம.இராமசுப்பிரமணியராஜா தெரிவித்துள்ளதாவது:

2015-2016-ஆம் கல்வி ஆண்டில் தமிழகத்தில் உயர்நிலை; மேல்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி, பல்கலைக் கழகத்தில் பயிலும் தகுதியுடைய விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மற்றும் மாணவரல்லாதோதர்களிடமிருந்து SDAT ஊக்க உதவி தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான ஊக்க உதவித் தொகை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி விளையாட்டு வீரர்கள் மற்றும் மாணவரல்லாதோர்களுக்கு ரூ.10,000- ம் மற்றும் கல்லூரி, பல்கலைக் கழக விளையாட்டு வீரர்களுக்கு ரூ.13,000-ஆக வழங்கப்படவுள்ளது.

Advertisement

இதற்கு 01.07.2014 முதல் 30.06.2015 முடியவுள்ள காலக் கட்டத்தில் விளையாட்டுத் துறையில் வெற்றிகளைப் பெற்று தகுதியும் திறனுமுடைய விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். மேலும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க தேசிய அளவிலான பள்ளி விளையாட்டு குழுமம், அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு கழகங்கள், இந்திய விளையாட்டு குழுமம் நடத்தும் போட்டிகள் மற்றும் அகில இந்திய பல்கலைக் கழகங்களுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

இத்திட்டத்தில் விண்ணப்பிக்க, பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரின் அலுவலகத்தில் ரூ.10- விண்ணப்பத் தொகையினை செலுத்தி விண்ணப்பங்கள் பெற்று கொள்ளலாம். மேலும் http://www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இணையதளம் மூலம் பெறப்படும் விண்ணப்பத்திற்கு விண்ணப்ப விலையான ரூ.10-ஐ உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சென்னை அவர்கள் பெயரில் அஞ்சல் ஆணையாகவோ அல்லது வங்கி வரைவோலையாகவோ பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிடையாக 10.09.2016-ந்தேதிக்கு முன்னர் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரின் அலுவலகத்தில் தக்க அசல் சான்றிதழ் மற்றும் நகல் ஆகியவற்றுடன் நேரில் சமர்ப்பிக்கபட வேண்டும், என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
23.09.2026 - 05:23:06
Privacy-Data & cookie usage: