இரண்டாம் நிலைக்காவலர், சிறைக்காவலர், தீயணைப்போர் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி

schedule
2017-02-23 | 16:05h
update
2026-06-24 | 11:51h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Second grade, and the jail and free training for firefighters choices

இரண்டாம் நிலைக்காவலர் இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்போர் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் 03.03.2017 முதல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பயிற்சி அரங்கில் நடத்தப்படவுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேலைநாடும் மாணவ, மாணவிகளுக்கு அவ்வப்போது பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement

இப்பயிற்சி வகுப்புகள் மூலம் பயின்று பலரும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று அரசுப்பணிகளில் சேர்ந்துள்ளனர். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் இரண்டாம் நிலைக்காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தியணைப்போர் உள்ளிட்ட 15,711 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

எனவே மேற்படி தேர்வுகளில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவியர்கள் பங்கு கொண்டு வெற்றி பெறும் நோக்கில் இலவச பயிற்சி வகுப்பு 03.03.2017 முதல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பயிற்சி அரங்கில் நடத்தப்படவுள்ளது.

பெரம்பலூர் மாவட்ட இளைஞர்கள், இளைஞிகள் இந்த வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இப்பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோர் கடவுச்சீட்டு அளவு புகைப்படம், சுய விவர குறிப்பு மற்றும் கைப்பேசி எண் ஆகியவற்றுடன் 28.02.2017-க்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.06.2026 - 11:51:40
Privacy-Data & cookie usage: